Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த ரணில்; வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த ரணில்; வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்து சவால்களை தனி நபராக எதிர்கொண்டு நாட்டை மாற்றி அமைத்த தலைவர் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ர்ஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி ஜனாதிபதி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகத்திற்கான பாரிய மைல்கல் நிகழ்வாக நேற்றைய நிகழ்வு அமைந்துள்ளது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த இந்த கட்டட தொகுதியை விரைவில் திறந்து, பயன்பாட்டிற்கு வழங்குமாறு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிம் கோரிக்கை விடுத்தேன்.

கோரிக்கையை ஏற்று, மே மாதம் கட்டடம் திறக்கப்படும் என அவர் கூறினார். அதன் பின்னர் ஒரு தடவை கூட இது தொடர்பில் பேசவில்லை. எனினும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி இந்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார். இதுவே தலைமைத்துவத்திற்கான சிறந்த வெளிப்பாடு. சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரம் இன்றி நாடு இருளுக்குள் கிடந்த போது, தலைமைத்துவத்தை பொறுப்பேற்று சவால்களை வெற்றிக்கொண்டார்.

பல சவால்களை தனி நபராக எதிர்கொண்டு, நாட்டை மாற்றி அமைத்தார். இவ்வாறான ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கில் ஆளுநராக சேவையாற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன்.” என்றார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், மாகாண பிரதம செயலாளர், ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

September 25, 2026
Next Post
மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு