Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் நீதிமன்ற அனுமதியுடன் புதையல் தோண்டிய பொலிஸார்!

மன்னாரில் நீதிமன்ற அனுமதியுடன் புதையல் தோண்டிய பொலிஸார்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை இன்றைய தினம் (27) காலை இடம்பெற்றது.

பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஸ்கேனர் இயந்திரம் உட்பட புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.

பேசாலை பொலிஸார் குறித்த 8 பேரையும் விசாரணைகளின் பின், மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில், குறித்த நபர்களை இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் குறித்த காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இடத்தில் அகழ்வு பணியை முன்னெடுக்க பேசாலை பொலிஸாரின் கோரிக்கைக்கு, நீதவான் அனுமதி வழங்கினார்.

அதையடுத்து மன்னார், பேசாலை பொலிஸார் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றது.

பெக்கோ இயந்திரம் பயன்படுத்தி அகழ்வு பணிகள் நடைபெற்றபோதும் எவ்வித பொருட்களும் அங்கு மீட்கப்படவில்லை.

மேலும் அகழ்வு பணியின் போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி வழங்கவில்லை.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குறித்த 8 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
Next Post
பொலிஸ் உத்தியோகத்தரை நிர்வாணமாக்கித் தாக்கிய பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது!

பொலிஸ் உத்தியோகத்தரை நிர்வாணமாக்கித் தாக்கிய பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு