Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!

2 years ago
in உலக செய்திகள்

காஸாவின் ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது கடந்த (மே 26) இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு தனது கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது. “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ரஃபா தற்காலிக முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தவறானது என்றும். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இருந்தும் இந்த தாக்குதலில் ஹமாஸின் இரண்டு மூத்த நிர்வாகிகளை கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

“ரஃபாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என தெரிகிறது. ரஃபாவில் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து வரும் படங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இஸ்ரேல் தனது போர் உத்தியை மாற்றிக் கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த மக்களை காக்கும் வகையிலான நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்தாக வேண்டும்” என ஐ.நா மனித உரிமைகள் உயர்மட்ட குழுவின் ஆணையர் டர்க் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் கடந்த (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 249 பேர் காயமடைந்துள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடையசெய்திகள்

பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
உலக செய்திகள்

பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு

September 18, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

September 17, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் 5 வருடங்களின் பின் உயிரிழப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் 5 வருடங்களின் பின் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு