Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிசுவின் மரணம் தொடர்பில் உண்மையை மறைக்கும் வைத்தியசாலை!

சிசுவின் மரணம் தொடர்பில் உண்மையை மறைக்கும் வைத்தியசாலை!

2 years ago
in செய்திகள்

மாத்தறையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயின் சிசுவின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

குறித்த தாயிற்கு பிறந்த குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட போதும், குழந்தையின் சடலத்தை தமக்கு காண்பிக்கவில்லை என அந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பிரசவிப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் தொடர்பில் வைத்தியசாலை பணிக்குழாமினர் மூன்று தடவைகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாய் அந்த மருத்துவமனையில் சேவையாற்றும் மகப்பேற்று மருத்துவர் ஒருவரிடம் தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை செய்துள்ள நிலையில் பிரசவத்திற்காக அந்த மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நடத்தப்பட்ட ஸ்கேன் (Scan) மற்றும் அதற்கு முன்னர் தனியார் சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையிலும் வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை அதிகாரிகள் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள போதும், பின்னர் குழந்தை இறந்ததாக அறிவித்துள்ளனர்.

இதற்கமைய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள சடலத்தை அடக்கம் செய்வதற்காக மாத்தறை மாநகர சபைக்கு 2500 ரூபாய் பணம் செலுத்தி பற்றுச்சீட்டை கொண்டு வருமாறு வைத்தியசாலை பணிக்குழாமினர் உறவினர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, உரிய தொகையை மாநகர சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் காட்டாமல் புதைத்தமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களிடம் உறவினர்கள் வினவிய போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இன்னுமொரு தகவலை தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உறவினர்கள் கடந்த (25) திகதி இரவு வரை வைத்தியசாலையில் காத்திருந்த போதிலும் வைத்தியசாலை பணிக்குழாமினர் எவரும் சடலம் தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்
செய்திகள்

அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்

September 27, 2026
மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்

September 27, 2026
சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
Next Post
சீனா கண்டுபிடித்துள்ள மூன்று நாட்களில் உயிரை கொல்லும் வைரஸ்!

சீனா கண்டுபிடித்துள்ள மூன்று நாட்களில் உயிரை கொல்லும் வைரஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.