Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜெர்மனியில் மேலாடையின்றி பெண்கள் குளிக்க அனுமதி; சட்டம் நிறைவேற்றிய அரசு!

ஜெர்மனியில் மேலாடையின்றி பெண்கள் குளிக்க அனுமதி; சட்டம் நிறைவேற்றிய அரசு!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ஜெர்மனி, பெர்லின் நகர அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு விரைவில் அனுமதிக்கப்படவிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளத்தில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் மேலாடையின்றி குளித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பலரும் புகார் அளித்த நிலையில், இந்த நீச்சல் குளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் அளித்த முறைப்பாட்டில், நீச்சல் குளத்தில் ஆண்களைப்போலவே பெண்களும் மேலாடை இல்லாமல் குளிக்கலாம். ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதியா? என அவர் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் அவரை வெளியேற்றியது தவறு என்று கூறியுள்ளது. இதனையடுத்து பெண்கள் மேலாடையின்றி குளிக்க சம்பந்தப்பட்ட நீச்சல் குளம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தற்போது பல நாடுகள் தங்களின் எதிர்ப்புக்களை பதிவு செய்து வருவதையும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக கண்டறிய முடிகின்றது.

மேலும், கலாசார விழுமியங்களை கடைப்பிடிக்கும் நாடுகளில் இவ்வாறான விடயங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஆகவே அவ்வாறான நாடுகள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் கிழம்பியுள்ளன.

இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், “இளம்பெண் ஒருவர் இங்குள்ள நீச்சல் குளத்தில் மேலாடையின்றி குளித்திருக்கிறார். பின்னர் அதே நீச்சல் குளத்தில் “சன் பாத்” எடுத்திருக்கிறார்.

ஆனால், அவர் இதற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். எனவே, அப்பெண் நீதிமன்றத்தை நாட, பாலின பாகுபாடுகள் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே பெர்லினில் உள்ள நீச்சல் குளங்களில் பாலின பாகுபாடு இல்லாமல் இருக்க புதிய உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்பட இருக்கிறது. இவை கடந்த ஆண்டு வந்த உத்தரவு” என்று கூறியுள்ளார்.

விரைவில் பெர்லினில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களிலும் இந்த அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

June 14, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

June 14, 2025
மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
Next Post
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு!

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு