இந்தியாவின் பெங்களூருவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவர முயற்சித்த உயர்தர மதுபான போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மதுபான போத்தல்களை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர நபர் ஒருவர் முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து விமான நிலைய சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட பரிசீலனையில் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதன் பெறுமதி 47 இலட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி 42 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.