ரயில் தண்டவாளத்தில் பஸ் ஒன்றை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் சாரதியே, இவ்வாறு ரயில் தண்டவாளத்தில் பஸ்ஸை செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, குறித்த பகுதியில் ஏற்பட்டிருந்த கடும் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்த்து செல்லும் நோக்கில், பஸ்ஸின் சாரதி, பஸ்ஸை ரயில் தண்டவாளத்தில் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில், பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பஸ்ஸை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.