Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

9-வது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய அணிகள் 20 ஓவர் உலகக் கிண்ணத்தில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான முழு பரிசுத்தொகை விபரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.

அதன்படி இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகையாக 11.25 மில்லியன் அமெரிக்க டொலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை மதிப்பில் சுமார் 3,396,075,750.00 ரூபாய் ஆகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 739,589,830.00 ரூபாய்) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2ம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டொலர் (386,397,952.00 ரூபாய்) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 7, 87,500 அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

சூப்பர் 8 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறாத அணிகளுக்கு தலா 3,82,500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், 9 முதல் 12 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 2,47,500 அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

மேலும், 13 முதல் 20 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 2,25,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. இது மட்டுமில்லாமல் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை தவிர்த்து மற்ற சுற்று போட்டிகளில் (லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று) ஒரு போட்டியை வென்றால் ஒவ்வொரு அணிக்கும் தலா 31,154 அமெரிக்க டொலர்கள் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

September 28, 2026
அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்
செய்திகள்

அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்

September 28, 2026
Next Post
நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை நிர்மாணிக்கத் திட்டம்; ஜனாதிபதி தெரிவிப்பு!

நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை நிர்மாணிக்கத் திட்டம்; ஜனாதிபதி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு