பழைய சட்டக் கட்டமைப்புகளைத் தொடர்ந்து பேணிக்கொண்டு புதிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்புடன் தொடர்புடைய அனைத்து சட்டங்களும் திருத்தப்படுவதுடன், புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோதே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.







