மாதாந்தம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மொத்தமாக 3 இலட்சம் திறன்மிகு மின்மானிகள் (Smart Meters) இலவசமாக வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) கீழ் மின்சார விநியோகத்தைப் பெறும் மாதாந்தம் 120 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோருக்கும் திறன்மிகு மின்மானிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.








