இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அரசாங்கம் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரப் பங்குடைமை ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோதே அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி, இலங்கையின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







