Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிங்கப்பூரில் அமுல்படுத்தப்பட்டிருந்த 34 ஆண்டுகால தடை ஒன்று நீக்கம்!

சிங்கப்பூரில் அமுல்படுத்தப்பட்டிருந்த 34 ஆண்டுகால தடை ஒன்று நீக்கம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பொது வீட்டுத் திட்டங்களில் பூனை மற்றும் நாய் வளர்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சிங்கப்பூர் அரசாங்கம் நீக்கியுள்ளது.

1989ஆம் ஆண்டுமுதல் பொது அடுக்கு மாடி குடியிருப்புகளில் பூனைகள் மற்றும் நாய்கள் வளர்க்க தடைவிதிக்கப்பட்டது.

இதனால் அடுக்குமாடியில் வசிக்கும் மக்கள் செல்லப்பிராணிகள் மீது பிரியம் கொண்டும் வளர்க்க முடியாதிருந்தனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரின் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் 90 வீதமான மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப்பிராணிகளை வளர்க்க அனுமதியளித்துள்ளனர்.

1960 ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூரில் நிலவிவந்த வீட்டுவசதி பற்றாக்குறை காரணமாக இவ்வாறு செல்லப்பிராணிகள் வளர்க்க 1989ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

செல்லப்பிராணிகள் பொது இடங்களில் மலம் கழிப்பதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டமை, பூனைகளின் உரோமங்களை அடுக்குமாடிகளில் பரவியமை உட்பட பல்வேறு காரணிகளின் பிரகாரம் இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மக்கள் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமையால் தடை நீக்கப்பட்டுள்ளது. என்றாலும், வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரமே செல்லப்பிராணிகளை வளர்க்க முடியும்.

இரண்டு விதமான பூனைகள் மற்றும் ஒரு நாய் இனத்தை வளர்க்க குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவர் என வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை மைக்ரோசிப் செய்து பதிவு செய்ய வேண்டும்.

பூனைகளை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க உரிமையாளர்கள் போதுமான பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் விலங்குகளுக்காக செலவிடப்படும் தொகை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் புதிய விதிகள் 2024 செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
யாழில் சான்று பொருட்களாக நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் தேயிலை தண்ணியாக மாறியதால் பரபரப்பு!

யாழில் சான்று பொருட்களாக நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் தேயிலை தண்ணியாக மாறியதால் பரபரப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு