நாட்டின் வனஜீவராசி வளங்களைப் பாதுகாப்பதையும், யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் களப் பணிகளை வலுப்படுத்தும் வகையில் 84 நவீன சிங்கிள் கெப் (Single Cab) வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், குறித்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாகத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒரே தடவையில் வழங்கப்பட்ட மிகப்பெரிய வாகனத் தொகுதி இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வாகனங்கள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திணைக்களத்தின் மொத்த வாகன எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, திணைக்களத்தின் வசம் தற்போது 84 சிங்கிள் கெப் வாகனங்கள், 16 டபுள் கெப் வாகனங்கள், 3 க்ரூ கெப் வாகனங்கள், 181 மோட்டார் சைக்கிள்கள், 9 டிராக்டர்கள் மற்றும் ஒரு ஹேண்ட் டிராக்டர் என மொத்தம் 294 வாகனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் களப் பணிகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







