யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் – பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது 9 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13) இரவு கனகம்புள்ளியடி சந்தியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த வேன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும், அவருடன் பயணித்த சிறுவனும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மட்டுவில் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தையும் அவரது 9 வயது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








