சர்வதேச சந்தையில் LPG எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, லாஃப்ஸ் (LAUGFS) நிறுவனம் தனது வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை உயர்த்தத் தீர்மானித்துள்ளது.
இந்த விலைத் திருத்தம் இன்று (13) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை 4,965 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட குறித்த சிலிண்டரின் புதிய விலை 6,740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையும் 732 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 1,988 ரூபாவாக இருந்த அதன் புதிய விலை 2,720 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர் மேலதிக செலவினத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.








