Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட பாரிய தொடர்பாடல் கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் விமானங்கள் புறப்படுவதற்கு அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) நேற்று (13) தற்காலிகத் தடை விதித்தது.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்து இவ்வாறு நிறுத்தப்பட்ட இரண்டாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் FlightAware அமைப்பின் தரவுகளின்படி, குறித்த தடையினால் சுமார் 7,000 விமானங்களின் சேவைகள் தாமதமடைந்ததுடன், சில விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன.

அதேவேளை, ஏற்கனவே வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்ட போதிலும், தரையில் காத்திருந்த விமானங்கள் எதுவும் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அமெரிக்க கிழக்கு நேரப்படி மாலை 3.54 மணியளவில் இந்த நாடளாவிய விமானப் போக்குவரத்துத் தடை அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக சிகாகோ நகரிலும் தொடர்பாடல் கோளாறு காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சமூக வலைத்தளமான X இல் கருத்துத் தெரிவித்த அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் ஷோன் டஃபி, விமானப் பாதைக் கட்டுப்பாட்டு மையங்களைப் பாதித்த தொடர்பாடல் சிக்கலே இந்தத் தடைக்குக் காரணம் எனவும், தொழில்நுட்ப நிபுணர்கள் அதனைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சில பகுதிகளில் தொடர்பாடல் சேவைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்தத் தடை மாலை வேளை வரை நீடித்தால், விமான சேவைகளை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர வார இறுதி நாட்கள் வரை செல்லக்கூடும் என விமானப் போக்குவரத்து ஆய்வாளர் ரொபர்ட் மான் எச்சரித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் இதேபோன்றதொரு நாடளாவிய விமானப் போக்குவரத்துத் தடை ஏற்பட்டிருந்ததுடன், சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் அது நீக்கப்பட்டிருந்தது.

பழமையான உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப உபகரணங்களின் கோளாறுகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பு தொடர்ச்சியாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

மேலும், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரொனால்ட் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் நடுவானில் இடம்பெற்ற விமான விபத்தில் 67 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் பழமையான விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நவீனமயப்படுத்துவதற்காக மேலதிகமாக 30.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குமாறு வெள்ளை மாளிகையும் போக்குவரத்துத் திணைக்களமும் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாகப் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து, சர்வதேச விமானப் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள சூழலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொடர்பாடல் கோளாறுக்கு சைபர் தாக்குதல் அல்லது குறித்த வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக அமைந்துள்ளன என்பதற்கான உடனடி ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், அமெரிக்க தேசிய வானிலை சேவையும் நேற்று நாடளாவிய ரீதியில் இணையம் மற்றும் தொடர்பாடல் சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி
செய்திகள்

வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி

November 14, 2026
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

November 14, 2026
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!
செய்திகள்

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!

November 13, 2026
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!
செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!

November 13, 2026
நீதிவானுக்கு எதிரான கருத்து; கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!
செய்திகள்

நீதிவானுக்கு எதிரான கருத்து; கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!

November 13, 2026
நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம்பெண் கொலை; தேடப்பட்டு வந்த காதலன் கைது
செய்திகள்

நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம்பெண் கொலை; தேடப்பட்டு வந்த காதலன் கைது

November 13, 2026
Next Post
வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி

வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.