ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு திருடர்களைப் பிடிக்க முடியாதபோதிலும் தமக்கு திருடர்களைப் பிடிக்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.திஸ்ஸமஹாராம பிரதேசத்
தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக் கையில்நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் காரணமாக நாடு வங்குரோத்து அடையவில்லை. நாட்டின் வளங்களை கொள்ளையிட்ட ராஜபக்ஷ அரசாங்கம் காரணமாகவே நாடு இந்த நிலைமையை அடைந்தது.இதன் காரணமாக நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் அநாதரவாகியுள்ளனர். வங்கு ரோத்து நிலைமையில் இருந்து மீளப் பணம் அவசியம்தரகு, இலஞ்சம் மூலம்
பெற்ற கோடிக்கணக்கான டொலர்களைத் திரும்பப் பெறுவதே இந்த நிலைமையை
போக்க இலகுவான வழியாக இருக்கும்.
இந்த பணத்தை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற போதிலும் திருடர்களை
நம்பி வாழும் தலைவருக்கு அதனைச் செய்ய முடியாது.நாட்டை அழித்து கொள்ளையிட்ட ராஜபக்ஷ பரம்பரை மற்றும் அவர்களின் ஆதரவாளர்களே தற்போதைய ஜனாதிபதியின் அடிப்படைப் பலமாக இருக்கின்றது.
கொள்ளையிட்ட பணத் தைக் கொண்டு வருவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் நாட்டுக்கு புதுயுகத்தை ஏற்படுத்த முடியும்.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் திருடர்களை கைது செய்து, அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை கைப்பற்றி, அவற்றை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவோம் – என்றார்.