Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம்(30) உயிரிழந்தார்.

குறித்த பெண், கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் அவரது வீட்டில் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலைமை தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்திருந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் அம்பாறை தடயவியல் பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து மோப்பநாய் உதவிகளுடன் சந்தேக நபர்கள், தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்!
செய்திகள்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்!

August 8, 2026
புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!
செய்திகள்

வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

August 8, 2026
பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!

August 8, 2026
இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!
செய்திகள்

இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!

August 8, 2026
Next Post
நானுஓயா – சமர்செட் தோட்டத்தில் மண்சரிவு; 28 குடும்பங்கள் பாதிப்பு

நானுஓயா – சமர்செட் தோட்டத்தில் மண்சரிவு; 28 குடும்பங்கள் பாதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு