Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம்; இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை!

ஆசிரியர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம்; இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அரசாங்கத்திற்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கி இருக்கின்றோம் ஜனாதிபதி ரணில் உடனடியாக எமது பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கையில் உள்ள அநேகமான அதிபர் ஆசிரியர்களை கொழும்புக்கு வரவழைத்து நாங்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “நேற்று முன்தினம் (12) இலங்கை வரலாற்றிலே 101 கல்வி வலயங்களிலும் மிகவும் வெற்றிகரமாக அதிபர் ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு மிக வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 27 வருடங்களாக அதிபர் ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் இருந்தது நாங்கள் 2001ஆம் ஆண்டு பாரிய போராட்டத்தின் மூலமாக மூன்றில் ஒரு பகுதி சம்பளத்தை 2022ஆம் ஆண்டு பெற்றோம்.

அதற்குப் பின்பு 2023-2024 வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் அதிபர்களுடைய சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சும் அதுபோல நிதி அமைச்சும் பல பொய்களை கூறியபோதும் எவ்வித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.

நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் அதிபர் ஆசிரியர்களுடைய சம்பள உயர்வை இந்த அரசாங்கம் வழங்கும் என்று ஆனால் இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.

பல போராட்டங்களை 2023 ஆம் ஆண்டு செய்திருந்தோம். அந்த ஜனநாயக நியாயமான போராட்டம் மீது ரணில் ராஜபக்ச அரசாங்கம் தடியடி கொண்டும் தண்ணீர் தாக்குதலும் ஆசிரியர் அதிபர்கள் மீது மேற்கொண்டார்கள்.

எனவே உடனடியாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க கூறி நாங்கள் கேட்கின்றோம். இந்த நாட்டில் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதி இன்று இல்லை நாங்கள் போராடுவது வெறுமனே அதிபர் ஆசிரியர்களது சம்பள உயர்வுக்காக மாத்திரமல்ல இலவச கல்வியை பாதுகாப்பதற்காகவும் தான் நாங்கள் போராடுகின்றோம்.

எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் நாட்டில் உள்ள பெற்றோர்கள் பொதுமக்கள் இணைந்து கொண்டு இந்த போராட்டத்தை நடத்துவார்கள்.

ஆனால் நேற்று முன்தினம் வெற்றி அளித்த இந்த போராட்டத்தை ஒரு சிலர் அரசாங்கத்திற்கு பின் நின்று கூலிப்படைகளாக செயல்படுகின்ற சிலர் அதிபர் ஆசிரியர்களை வேறு கோணத்தில் அல்லது வேறு பாதையில் திசை திருப்புகின்றார்கள்.

எனவே அதிபர் ஆசிரியர்களை இந்த கூலிப்படைகளை கண்டு நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்” என்றும் ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்

September 30, 2026
ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!
செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!

September 30, 2026
ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!
செய்திகள்

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

September 30, 2026
அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

September 30, 2026
மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
காணொளிகள்

மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

September 30, 2026
திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்
செய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

September 30, 2026
Next Post
மாகாண ஆளுநர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

மாகாண ஆளுநர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.