Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு மூன்று மாவட்ட பகுதிகளில் திருடியவர்கள் கைது!

வடக்கு மூன்று மாவட்ட பகுதிகளில் திருடியவர்கள் கைது!

2 years ago
in செய்திகள்

வடக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 பேர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று(14) தெரிவித்தனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், தொலைபேசி ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் 6 இடங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், புளியங்குளத்தில் பிறிதொரு வீடு உடைத்து கிரேண்டர், லெப்டொப், லைற் உள்ளிட்ட பொருட்களும் குறித்த சந்தேக நபர்களால் திருடப்பட்டுள்ளன.

மேலும், மன்னார் பகுதியில் வீடு உடைத்து 5 இலட்சம் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதுடன், மன்னார், பேசாலைப் பகுதியில் 3 வயது பிள்ளை அணிந்திருந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும் குறித்த நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட நகைகள் வவுனியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த 6 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவரும், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரும், யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

June 8, 2026
அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

June 8, 2026
இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

June 8, 2026
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!
செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!

June 8, 2026
கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு
செய்திகள்

கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு

June 8, 2026
Next Post
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு