Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி பொது வேட்பாளரை ஒன்றிணைந்து ஆதரித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்; கிழக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டு!

ஜனாதிபதி பொது வேட்பாளரை ஒன்றிணைந்து ஆதரித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்; கிழக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டு!

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவு செய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவு செய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வு செய்யமுடியும்.

யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதற்கு 51 வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும் போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்

September 30, 2026
ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!
செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!

September 30, 2026
ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!
செய்திகள்

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

September 30, 2026
அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

September 30, 2026
மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
காணொளிகள்

மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

September 30, 2026
திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்
செய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

September 30, 2026
Next Post
யாழ் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் வாள்வெட்டு சம்பவம்!

யாழ் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் வாள்வெட்டு சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு