Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பானில் பரவி வரும் ஆபத்தான பற்றீரியா நோய்த் தொற்று!

ஜப்பானில் பரவி வரும் ஆபத்தான பற்றீரியா நோய்த் தொற்று!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை பற்றீரியா நோய் தொற்று பரவி வருகிறது. கடந்த 2 ஆம் திகதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.

எஸ்.டி.எஸ்.எஸ். (STSS) எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் என்ற இந்த வகை நோய் தொற்றால் இதுவரை மொத்தம் 977 பேருக்கு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 941 ஆக இருந்தது.

ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் சுமார் 77 பேர் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோயானது, உடல் பகுதியை சாப்பிட கூடிய பற்றீரியாவால் ஏற்பட கூடியது. மனிதர்களை 48 மணிநேரத்தில் கொல்லும் சக்தி படைத்தது. இந்த நோயானது ஜப்பானில் பரவி வருகிறது.

இதன் பாதிப்பால், வீக்கம் மற்றும் தொண்டையில் வலி ஏற்படும். சில பேருக்கு, காலில் வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் விரைவாக ஏற்படும்.

இதன்பின்னர், சுவாச பாதிப்பு, உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி டோக்கியோ மகளிர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்களுக்கான பேராசிரியர் கென் கிகுசி கூறும்போது, பெருமளவில் 48 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.

காலையில் நோயாளியின் காலில் வீக்கம் கண்டறியப்பட்டால், மதியம் அது முழங்காலுக்கும் பரவி, 2 நாட்களில் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள்.

ஜப்பானில் இந்த விகிதத்தில் பரவி வரும் தொற்றுகளால், நடப்பு ஆண்டில் பாதிப்பு எண்ணிக்கை 2,500 ஆக அதிகரிக்க கூடும். 30 சதவீதம் அளவுக்கு இறப்பு விகிதம் இருக்க கூடும் என்றும் கிகுசி கூறியுள்ளார்.

இதனால், கைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மக்களை அறிவுறுத்தி உள்ளார். சமீபத்தில், ஜப்பான் தவிர்த்து, வேறு சில நாடுகளிலும் இந்த நோயின் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச
செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

August 3, 2026
06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
Next Post
பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு