Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணி உறுதி பத்திரங்கள் தொடர்பான நடமாடும் சேவை விரைவில்!

காணி உறுதி பத்திரங்கள் தொடர்பான நடமாடும் சேவை விரைவில்!

2 years ago
in செய்திகள்

நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 – 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை நடத்த ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி காணி உறுதிகளை வழங்குவதற்கான சகல துறைசார் அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக விரைவாக காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்,

“உறுமய திட்டத்தின் கீழ் பெருமளவான காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்ததை விரைவுபடுத்தும் நோக்கில் நடமாடும் சேவையொன்றையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இம்மாதம் 26 – 30 திகதி வரையில் இந்த நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது காணி உறுதிகளை மக்களுக்கு வழங்குதற்காக சகல அதிகாரிகளும் நடமாடும் சேவையில் பங்கெடுப்பர்.

உறுதியை பெற்றுக்கொள்ள வருவோர் அவர்களின் பழைய உறுதிகள் அல்லது அனுமதி பத்திரங்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைப்பதை மாத்திரமே செய்ய ​வேண்டும்.

ஏனைய அளவையியல் பணிகள், பதிவுச் செயற்பாடுகள் என்பவற்றை அதிகாரிகள் முன்னெடுப்பர்.

இந்த சேவையுடன் பதிவாளர் திணைக்களம், அளவையியல் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்துகொள்வர். இதற்காக சிறிதும் பணம் அறவிடப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இச் சேவை எந்த எந்த பிரதேசங்களில் நடைபெறும் என தீர்மனங்களின் அடிப்படையில் மிக விரைவில் அறிவிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!
செய்திகள்

பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

August 17, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; ஆறு தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; ஆறு தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்!

August 17, 2026
கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!
செய்திகள்

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!

August 17, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!

August 17, 2026
2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!
செய்திகள்

2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!

August 17, 2026
ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
செய்திகள்

ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

August 17, 2026
Next Post
பெண் பணியாளர்களுக்கு ஆபாச காணொளி அனுப்பிய முன்னாள் கடற்படை அதிகாரி கைது!

பெண் பணியாளர்களுக்கு ஆபாச காணொளி அனுப்பிய முன்னாள் கடற்படை அதிகாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு