பெண் கிளார்க் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக தனியார் நிறுவனமொன்றின் மனிதவள முகாமையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏழு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா 750,000 நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இது தொடர்பான மூன்று குற்றங்களில், இருந்து குறித்த பிரதிவாதியை மேல் நீதிமன்றம் விடுவித்திருந்தது.
எனினும் மேல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டுக்கு இணங்கவே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் அபயகோன் மற்றும் பி. குமாரரட்ணம் ஆகிய இரண்டு நீதியரசர்களைக் கொண்ட அமர்வில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களிலும், குறித்த பிரதிவாதியை குற்றவாளி என தீர்ப்பளித்தது.