Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தம்பலகாமம் பகுதியில் கத்திக்குத்து; தாய் மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதி!

தம்பலகாமம் பகுதியில் கத்திக்குத்து; தாய் மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதி!

2 years ago
in செய்திகள்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் பெண் வேடம் போட்டு தாய் மற்றும் மகளை கத்தியால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (26) மாலை இடம் பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்துள்ளார்.

அதேவேளை குறித்த தாக்குதலுக்கு உள்ளான 54 வயதுடைய தாயும் ,31 வயதுடைய மகளும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தாய் மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கும் மகள் கந்தளாய் தளவைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

குறித்த சந்தேகநபர் ஈச்ச நகர் பகுதியில் தொலைபேசி திருத்தகம் ஒன்றை நடாத்திவந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த குடும்பப்பெண் குறித்த நபருக்கு கடனாக பணம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் கொடுத்த பணத்தை மீளப்பெறுவதற்காக நேற்றைய தினம் குறித்த குடும்பப்பெண், சந்தேகநபரின் கடைக்குச் சென்று பணத்தை கோரியுள்ளார்.

அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த பெண் அவ்விடத்திலிருந்து சென்றுள்ளார்.

பின்னர், நேற்று மாலை குறித்த சந்தேக நபர் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று பெண்ணுக்கும் அவரின் மகளுக்கு கத்தியால் தாறுமாறாக குத்தியுள்ளார் . பின்னர் இரத்தக்கறைகளை தண்ணீரால் கழுவிவிட்டு, அந்த வீட்டில் இருந்த ஹபாயாவை அணிந்து பெண் வேடத்தில் வெளியே வந்துள்ளார்.

முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே நடமாடியவர் மேல் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து விசாரித்ததுடன், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!
அரசியல்

இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!

August 18, 2026
கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

August 18, 2026
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

August 18, 2026
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!
செய்திகள்

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!

August 18, 2026
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!

August 18, 2026
Next Post
இஸ்ரேலுக்கு இரகசியமாக ஆயுதங்களை அனுப்பும் இந்தியா!

இஸ்ரேலுக்கு இரகசியமாக ஆயுதங்களை அனுப்பும் இந்தியா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு