அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை எடுத்துச் செல்லத் தயாராகியிருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 204 கிராம் 660 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (17) பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








