வட கொரியாக ஏவி சோதித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை பாதி வழியில் வெடித்துச் சிதறியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்தது.
ரஷ்ய – வட கொரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, தென் கொரியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் தனது விமானந்தாங்கிக் கப்பலை அமெரிக்கா அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இதைக் கண்டித்தே ஒலியை விட 5 மடங்கு அதிக வேகம் கொண்ட ஏவுகணையை வட கொரியா சோதித்ததாகக் கூறப்படுகிறது.