2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பரீட்சைக்கான அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் அவற்றைச் சரிசெய்துகொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தமது அனுமதி அட்டைகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
மேலும், பரீட்சை நிறைவடைந்த பின்னர் அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குறித்த காலக்கெடுவுக்குள் தமது அனுமதி அட்டைகளைச் சரிபார்த்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







