Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்களை கொல்ல ஆயுத பரிமாற்றம்; பிள்ளையான்- அநுர ஆகியோரின் கட்சிகளை தடைசெய்யுமாறு கோரிக்கை!

மக்களை கொல்ல ஆயுத பரிமாற்றம்; பிள்ளையான்- அநுர ஆகியோரின் கட்சிகளை தடைசெய்யுமாறு கோரிக்கை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

”பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் (TMVP )அநுரவின் ஜே.வி.பியையும் ( JVP) தேர்தல் ஆணையாளர் உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் செய்த ஜே.வி.பி கட்சியியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள அநுர குமார திஸநாயக்க, இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

குறித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமான ”தங்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஜே.வி.பி. யினர் எனவும் மக்களை கொலை செய்வதற்காக திருப்பி கேட்டபோது அதனை தாம் வழங்கவில்லை எனவும் பிள்ளையான் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் இந்த இரண்டு தரப்பினரும் ஆயுத பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளமை அப்பட்டமாகத் தெரிகின்றது. கடந்த யுத்த காலங்களில் தென்பகுதியில் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல வடக்கு கிழக்கிலும் அப்பாவி மக்கள் புத்திஜீவிகள், படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவீந்தரநாத், ஜோசெப் பரராஜசிங்கம், மனித நேய பணியாளர்கள் என 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை, மற்றும் சிறுவர்கள் பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பிள்ளையான் மீது உள்ளன.

இந்நிலையில் தற்போது இந்த ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது என்பதை ஒத்துக் கொண்டுள்ளமையால் இந்த படுகொலைகளை இந்த இரு கட்சிகளையும் சேர்ந்தவர்களே செய்துள்ளனர் என வெளிப்படையாகத் தெரிகின்றது.

ஒரு ஜனநாயகக் கட்சியாக இருக்கின்றவர்கள் இப்படிபட்ட சட்டவிரோத ஆயுத பரிமாற்றத்தில் ஈடுபடமுடியாது. இது சர்வதேச சட்டத்துக்கு முரணான விடயம். ஆகவே இரு கட்சிகளையும் உடனடியாக தேர்தல் ஆணையாளர் தடை செய்ய வேண்டும். அத்துடன் இரு கட்சிகளையும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தபடவேண்டும்.

சர்வதேச மட்டத்தில் இவர்களுடைய அமைப்புக்களைத் தடை செய்வதோடு, இவர்களது அலுவலகங்கள் சோதனையிடவேண்டும்.

அத்துடன் பயங்கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும்” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டு ஆசை காட்டி பலரிடம் பணம் சுருட்டிய யாழ் நபரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது
செய்திகள்

வெளிநாட்டு ஆசை காட்டி பலரிடம் பணம் சுருட்டிய யாழ் நபரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது

November 11, 2026
கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!

November 11, 2026
வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!
செய்திகள்

வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!

November 11, 2026
பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

November 11, 2026
இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இழுபறி; இடைக்காலப் பிரதமராகத் தொடரும் நெதன்யாகு!
செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இழுபறி; இடைக்காலப் பிரதமராகத் தொடரும் நெதன்யாகு!

November 11, 2026
யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களிடமிருந்து தப்பிய கைதி நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களிடமிருந்து தப்பிய கைதி நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி!

November 11, 2026
Next Post
காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டியவர் கயிறு இறுக்கி உயிரிழப்பு!

காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டியவர் கயிறு இறுக்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு