Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெல் அறுவடையை இரட்டிப்பாக்க நடவடிக்கை முன்னெடுப்பு!

நெல் அறுவடையை இரட்டிப்பாக்க நடவடிக்கை முன்னெடுப்பு!

2 years ago
in செய்திகள்

நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க தொழில்நுட்பப் பொதி (பெக்கேஜ்) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

”இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்” என்ற தொனிப்பொருளில் அதிபர் ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இதனைக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரம்பரிய விவசாயத் தொழிலுக்கு அப்பால் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை விவசாய அமைச்சு வெற்றிகரமாக நிர்வகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நெற்செய்கையின் வெற்றிகரமான பெறுபேறுகள் எட்டப்பட்டுள்ளதுடன் 800,000 மெற்றிக் தொன் அரிசி அறுவடை கிடைத்துள்ளதாக ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

நெல் விலை தொடர்பில் அமைச்சு என்ற வகையில் தலையிட முடியாது. ஆனால் திறந்த பொருளாதாரத்தில் விலை பராமரிப்பு நியாயமாக இருக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.

தற்போது இரண்டு வகையான அரிசிகளின் கையிருப்பே பேணுப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனைத்து வகை அரிசிகளும் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும்.

மேலும், உலர் வலயத்தில் அதிக கவனம் செலுத்தி, விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரையின் பேரில், பயன்படுத்தப்படாத வயல் நிலங்கள் ஏனைய பயிர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இது உணவு உற்பத்தியில் சாதகமான முன்னேற்றமாக இருக்கும். தற்போது விவசாயத் துறையை உள்ளுர் எல்லைக்கு அப்பால் வெளிநாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்டு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மேலும், ஸ்ட்ரோபரி, மாம்பழம், அன்னாசி போன்ற பழப் பயிர்களை ஏற்றுமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளது என்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்!

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.