Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எட்டு ஜனாதிபதியாலும் ஏமாற்றப்பட்ட தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவை பார்க்கின்றோம்; அரியநேத்திரன் தெரிவிப்பு!

எட்டு ஜனாதிபதியாலும் ஏமாற்றப்பட்ட தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவை பார்க்கின்றோம்; அரியநேத்திரன் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்கள் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று (02) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார கிளை தலைவர் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் போது அஞ்சலி செலுத்தும் முகமாக தீபச்சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுகையில்,

சம்பந்தன் ஐயாவின் அரசியல் வாழ்க்கை தொடர்பாகவும், அவரது செயற்பாடுகள் தொடர்பாகவும் உரையாடியதுடன் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என எட்டு ஜனாதிபதிகளிடமும் அதாவது யுத்த காலத்திற்கு முன்னர் இருந்த ஐந்து ஜனாதிபதியிடமும் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இருந்த மூன்று ஜனாதிபதிகளிடமும் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பது விடயம் தொடர்பாக பேசப்பட்டும் அதற்கான தீர்வினை எந்த ஜனாதிபதியும் பெற்றுக் கொடுக்காமல் சம்பந்தன் ஐயாவை ஏமாற்றி இருக்கின்றார்கள் என கருத்து தெரிவித்தனர்.

அத்தோடு சம்பந்தன் ஐயா அரசியலுக்கு வர முன் ஒரு சட்டத்தரணியாக பணியாற்றியதுடன் அந்த காலப்பகுதியில் 800இற்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் ஆஜராகி இருந்தார். அந்த நிலையில் அரசியலுக்கு வருகின்ற போது அவற்றினை முடித்து விட்டே வருவேன் எனக் கூறி அவ்வாறு வந்து தமிழ் மக்களின் உரிமைக்காகவே தனது தொடர் போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுத்தார்.

கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தன் ஐயாவின் ஆசைப்படியே இறுதி வரை நமது உரிமைகளுக்காக போராட வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
மத நிகழ்வில் கலந்து கொண்ட 116 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் சம்பவம்!

மத நிகழ்வில் கலந்து கொண்ட 116 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.