Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பானி பூரி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு; புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

பானி பூரி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு; புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

2 years ago
in செய்திகள்

பானி பூரியின் தரத்தினை பரிசோதித்த போது, அதிலுள்ள செயற்கை நிறமிகள் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகவில் சில மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், கபாப், பஞ்சு மிட்டாய் ஆகியவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்கள் கலப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பானி பூரியில் செயற்கை நிறமிகள், ரசாயனங்கள் கலக்கப்படுவதாக அம் மாநில உணவுத்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, உணவுத்துறை அதிகாரிகள் 276 கடைகளில் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தனர். இதில், 41 மாதிரிகளில் செயற்கை நிறமிகள், புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 18 பானி பூரி மாதிரிகள் (22%) மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை என தெரியவந்தது. 52 சதவீத மாதிரிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனங்கள் கலந்துள்ளது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்ததாவது,

“எங்களது சோதனைக்கு தெருவோர கடை முதல் நட்சத்திர விடுதி வரையிலான கடைகளில் விற்பனை செய்யப்படும் பானி பூரியின் மாதிரிகளை பயன்படுத்தினோம். அதில் நீலம், பச்சை, ஆரஞ்சு போன்ற நிறங்களில் இரசாயனங்கள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. இது தொடர்பான விரிவான அறிக்கையை அரசுக்கு அளித்திருக்கிறோம். மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்ற உணவை ஏன் தடை செய்யக்கூடாது?”என கேள்வி எழுப்பினோம்.

கர்நாடக சுகாதார மற்றும் உணவுத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில்,

“கர்நாடகாவில் பாதுகாப்பான உணவை அனைவருக்கும் வழங்குவதற்கு முழு முன்னுரிமை அளித்து வருகிறோம். செயற்கை நிறமிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களது சமீப ஆய்வில் சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி சில உணவு பொருட்களை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

உணவக உரிமையாளர்கள் பாதுகாப்பான உணவை சுகாதாரத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். பொறுப்புடன் செயல்படாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?
செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?

October 3, 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!
செய்திகள்

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு