காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள டெங்கு ஒழிப்பு செயலணிக் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளரும் காத்தான்குடி டெங்கு தடுப்பு செயலியின் தலைவருமான யு.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம். உவைஸ், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதனைகள் என பலரும்கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மழை ஆரம்பித்ததால் டெங்கு தாக்கமும் அதிகரிக்கும் நிலைகாணப்படுவதால், டெங்கு விழிப்புனர்வு நடவடிக்கை மற்றும் டெங்கு நுளம்புகளை பரப்பும் இடங்களைஅவதானித்ததில் அவற்றை சுத்தப்படுத்தல், பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
காத்தான்குடி வடக்கு மற்றும் தெற்கு எல்லை வீதிகள் காத்தான்குடி வாவிக்கரையோரம் போன்றபகுதிகளில் குப்பைகள், திண்மக் கழிவுகளை போடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.