Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக விலங்குகளை கடத்தியவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக விலங்குகளை கடத்தியவர்கள் கைது!

2 years ago
in செய்திகள்

சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை மீன்பிடி இழுவைப் படகு மூலம் கடல் வழியாக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் ஐவர் தென்கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் 34 முதல் 67 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இழுவை மீன்பிடி படகினை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 13 மலைப்பாம்புகள், உடும்பு ஒன்று, ஆமை ஒன்று மற்றும் மூன்று கிளிகள் என்பன மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது, குறித்த குறித்த மீன்பிடி இழுவை படகில் பயணித்த ஐவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் எடுத்து வந்த ஊர்வன மற்றும் பறவைகள் என்பனவற்றை பறிமுதல் செய்த கடற்படையினர் சந்தேக நபர்கள் பயணித்த இழுவை மீன்பிடி படகினையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், சட்டவிரோதமாக இழுவை மீன்பிடி படகில் கொண்டு வரப்பட்ட விலங்குகளை பரிசோதித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், குறித்த விலங்குகள் இலங்கைக்கு சொந்தமனவை அல்ல என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விலங்குகள் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது இலங்கை ஊடாக வேறு ஒரு நாட்டிற்கு அனுப்புவதற்காக இவ்வாறு கடத்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடி படகு மற்றும் பறவைகள் , ஊர்வன என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
Next Post
கனடாவில் ஏழு பேர் கைது; காவல்துறையினர் வெளியிட்ட தகவல்!

கனடாவில் ஏழு பேர் கைது; காவல்துறையினர் வெளியிட்ட தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு