Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

2 years ago
in செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நாளை முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று வீசும்.

இக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் ஆக அதிகரித்துக் காணப்படும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.இக் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!
செய்திகள்

கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!

July 6, 2026
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!
செய்திகள்

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

July 6, 2026
சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்; பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!
செய்திகள்

சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்; பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

July 6, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!

July 6, 2026
ஜூலை முதல் செப்டம்பர் காலப்பகுதியில் எல் நினோ இலங்கையில் தீவிரமடையும்
செய்திகள்

ஜூலை முதல் செப்டம்பர் காலப்பகுதியில் எல் நினோ இலங்கையில் தீவிரமடையும்

July 6, 2026
வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு!
உலக செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு!

July 6, 2026
Next Post
எதிர்கால சந்ததியனருக்கு கல்வி கற்பதில் அச்சநிலை ஏற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிப்பு!

எதிர்கால சந்ததியனருக்கு கல்வி கற்பதில் அச்சநிலை ஏற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு