Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது

மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது

15 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி வந்த கணவன், மனைவிக்கிடையே இன்று புதன்கிழமை (18) காந்தி பூங்காவின் வாகன தரிப்பிடத்தில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து மனைவியின் சகோதரனுக்கும் கணவருக்கும் இடையே பெரும் சண்டை இடம்பெற்றதுடன் மைத்துனர் மீது காரை செலுத்தி முட்டி மோதிய சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி மைத்துனர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பார் வீதியைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனைவி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று நீதிமன்றத்தில் இடம்பெற இருந்த வழக்கு விசாரணைக்கு மனைவி அவரது சகோதரனுடன் கணவன் தனியாகவும் நீதிமன்றத்துக்கு சென்று ஆஜராகி வழக்கு திகதியிடப்பட்ட நிலையில் மூவரும் நீதிமன்ற கட்ட பகுதியில் இருந்து வெளியேறி நீதிமன்ற வாகன தரிப்பிடமான காந்தி பூங்கா பகுதிக்கு வந்துள்ளனர்.

இதன்போது கணவன் மைத்துனரை தாக்க முற்பட்டு இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் விலக்கி விட்டனர். அதன் பின்னர் கணவர் மைத்துனன் மீது காரால் மோதியதையடுத்து கார் மீது மைத்துனன் தாக்குதல் நடத்தியதில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

பொது மக்கள் சண்டையை பிரித்துவிட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் 3 பேரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதுடன் காரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்து; 19 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்து; 19 பேர் உயிரிழப்பு!

November 18, 2026
மஹிந்த ராஜபக்ஷவுக்காக உயிரையும் பணயம் வைக்கத் தயார்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவுக்காக உயிரையும் பணயம் வைக்கத் தயார்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

November 18, 2026
குவைத் அமெரிக்க விமானத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

குவைத் அமெரிக்க விமானத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்!

November 18, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கை

November 18, 2026
ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தலைவர்களைக் கொல்லத் திட்டம்; பாகிஸ்தானியருக்கு 27 ஆண்டுகள் சிறை!
உலக செய்திகள்

ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தலைவர்களைக் கொல்லத் திட்டம்; பாகிஸ்தானியருக்கு 27 ஆண்டுகள் சிறை!

November 18, 2026
GTA 6 வெளியீட்டு நாளில் பாடசாலைக்கு வந்தால் £65 பரிசு; இங்கிலாந்து பாடசாலை அறிவிப்பு!
உலக செய்திகள்

GTA 6 வெளியீட்டு நாளில் பாடசாலைக்கு வந்தால் £65 பரிசு; இங்கிலாந்து பாடசாலை அறிவிப்பு!

November 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.