முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உணர்வுபூர்வமான வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
“இதயத்தின் ஜனாதிபதியே, தங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” எனத் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள அவர், மஹிந்த ராஜபக்ஷவுக்காகக் குரல் கொடுப்பதும், மேடைகள் அமைப்பதும் சிறைக்குச் செல்லக் காரணமாக அமையுமாயின், அவருக்காகத் தானும் தனது மகனும் குடும்பத்தினரும் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குருநாகல் (எத்துகல்புர) மக்கள் முன்னிலையில் இந்த உறுதியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “யார் சென்றாலும் ஜோனி செல்ல மாட்டார்” என மஹிந்த ராஜபக்ஷ தம்மீது வைத்திருந்த நம்பிக்கையை என்றும் பாதுகாப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.







