உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதலாவது முத்தரப்பு உச்சிமாநாடு நாளை (19) சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர். இதனை சீன வெளிவிவகார அமைச்சு நவம்பர் 16ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மூன்று நாடுகளின் தலைவர்களும் நேரடியாகப் பங்கேற்கும் இத்தகைய முத்தரப்புச் சந்திப்பு வரலாற்றில் இதுவே முதன்முறையாகும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் உலக அமைதியைப் பேணுதல், வல்லரசு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் மூலோபாய ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர்.
அத்துடன், அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பான விடயங்களையும் விவாதிக்க ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் பின்னணியில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு, மூன்று வல்லரசுகளுக்கும் இடையிலான உறவுகளிலும் சர்வதேச அரசியலிலும் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.







