ரஷ்யாவில் உதிரிப் பாகங்களை ஏற்றிச் சென்ற ஏ.என்.12 (AN-12) இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நோவோசிபிர்ஸ்கில் இருந்து நேற்று (17) கான்ஸ்க் நோக்கிப் பயணித்த இந்த விமானம், கெமரோவோ பகுதியில் உள்ள யாகுனோவோ கிராமத்திற்கு அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் தாழ்வாகப் பறந்து தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறங்க முயன்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







