இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக அதன் ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் உரிய அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது குறிப்பாக 2016 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள் இந்த நாட்டில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.