Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்!

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி ஏற்பாட்டில், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாகவும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாகவும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது, இவற்றில் உடன் தீர்க்கப்பட கூடிய பல பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிராமிய பாலங்கள் புனரமைப்பு தொடர்பாகவும், மேலதிகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அந்தந்த மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களால் நிகழ்நிலை ஊடாக விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு துறைசார் அதிகாரிகளால் மாவட்டங்களில் காணப்படும் போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துக்கோரள, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜெஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!
செய்திகள்

கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!

October 5, 2026
ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!
உலக செய்திகள்

ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!

October 5, 2026
அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!
செய்திகள்

அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!

October 5, 2026
ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 5, 2026
Next Post
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு