மொரட்டுவை, லக்ஷபதி ரதுகுருச பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (15) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
‘பொடி அய்யா’ என்று அழைக்கப்படும் 41 வயதான ஹரேந்திர குமார என்பவரே இவ்வாறு கொலை கொல்லப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸ் நிலையப் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.