திருகோணமலை உப்பு வெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் போதை மாத்திரைகளுடன் அண்ணன் – தம்பி என இருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 28 வயதுடைய அண்ணன் தம்பி எனவும், இவர்களிடமிருந்து 362 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.