Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாட்டில் காணப்படும் குறைபாட்டை திருத்தும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை 22 ஆவது திருத்த சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டாம் என தான் நீதியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்டமூலம் நேற்று (18) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையானது, அதன் (ஆ) எனும் பந்தியில் ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட என்னும் சொற்பதத்துக்கு பதிலாக ஐந்து ஆண்டுகள் எனும் சொற்பதத்தை சேர்க்கும் வகையில் இத்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் சிங்க,தமிழ் உரைகளுக்கிடையில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கியதாக கருதப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும் அல்லது தேர்தல் பணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிரக்கட்சியினரும்,சிவில் அமைப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிபபடுத்துகின்றனர்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த வரைவினை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவி காலத்துடன் தொடர்புடைய ஒரு விடயத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு கோரும் போது ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் நெருக்கடிக்குள்ளாகும் என எதிர்தரப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் வாரம் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 14 நாட்களுக்குள் இலங்கை பிரஜைகள் எவரும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

523-2024_TDownload

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!

October 30, 2026
வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!
செய்திகள்

வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!

October 30, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!

October 30, 2026
ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 30, 2026
ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!
செய்திகள்

ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

October 30, 2026
மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு

October 30, 2026
Next Post
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கொலை; ஒருவர் கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கொலை; ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு