Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வறட்சியால் பாதிக்கப்படும் ஆப்பிரிக்க குழந்தைகள்!

வறட்சியால் பாதிக்கப்படும் ஆப்பிரிக்க குழந்தைகள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் நிலவும் கடும் வறட்சியால் இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வியை கடுமையாக பாதிக்கிறது.

குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதற்கு பதிலாக அவர்களது வீடுகளில் இருந்து வருகிறார்கள். வறட்சியால் எப்போதும் ஆப்பிரிக்கா கண்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

எல்நினோ காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகளவில் வானிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வானிலை மட்டுமின்றி பருவநிலை மாற்றம் மிகப் பெரிய அபாயமாக உருவெடுத்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பலவும் பாதிப்புகளை சந்தித்து வந்தாலும், மிகவும் மோசமான பாதிப்பினை ஆப்பிரிக்க நாடுகளே சந்திக்கின்றன. வறட்சி, விளைச்சல் பாதிப்பு போன்றவை ஆப்பிரிக்க நாட்டு மக்களை குறிப்பாக குழந்தைகளை பல நேரங்களில் பசியின் பிடியிலேயே வைத்துள்ளது.

ஆப்பிரிக்க மக்கள் பலரும் தங்களது கண்முன்னே ஒரு தலைமுறை அழிவுக்குள்ளாவதை பார்த்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேவின் வடகிழக்கு பகுதியில் முட்ஸி மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு விளைபயிர்கள் அவர்கள் உயிர்வாழத் தேவையான மிக முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறிதான். விளைச்சல் பாதிக்கப்பட்டால் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அவர்களுக்கு வருமானம் என்பது இல்லாமல் போகும்.

குடும்பத்துக்கு வருமானம் இல்லாதபோது, குழந்தைகளை 25 டொலர்கள் செலுத்தி பாடசாலையில் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கான சீருடையை வாங்கிக் கொடுப்பது எல்லாமும் அந்த மக்களின் சக்திக்கு மீறிய விடயமாக மாறிவிடுகிறது. இதனால், அவர்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்திவிடுகின்றனர். குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி என்பது ஒருபோதும் கிடைக்காத சூழலே நிலவுகிறது. அப்படியே குழந்தைகள் பாடசாலைக்குச் சென்றாலும், அவர்களுக்கு மதிய உணவு என்பது கிடையாது. உணவின்றி குழந்தைகள் பாடசாலையில் இறக்க நேரிடும் அவலநிலையும் உள்ளது. குடும்பங்கள் பலவும் ஒருவேளை உணவை மட்டும் உட்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

எல்நினோ விளைவால் குழந்தைகளே அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். எல்நினோவால் தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பகலில் அதிக அளவில் வெப்பம் நிலவுகிறது. எல்நினோ விளைவால் ஏற்படும் திடீர் வெள்ளப் பெருக்கும் ஆப்பிரிக்க மக்களை வஞ்சிக்கிறது. விளைநிலங்கள் வறட்சியால் கடும் பாதிப்புக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப்படுகிறது. 60 சதவிகித சிம்பாப்வே மக்கள் விவாசயத்தினை நம்பியே இருப்பதால், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

சிம்பாப்வேவில் 5,80,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அமைப்பகம் எச்சரித்துள்ளது. எல்நினோ விளைவு பொருளாதார கடினங்களோடு, காலரா போன்ற நோய்கள் பரவவும் காரணமாக அமைகிறது.

குழந்தைகளின் கல்வி மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பாடசாலைக்கு சென்று கல்வி கற்பது எட்டாக் கனியாக மாறியுள்ளது. பாடசாலையிலிருந்து இடைநிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைகள் வேலைக்கு செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். பாடசாலைகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் பதின்பருவ பெண் குழந்தைகள் மாதவிடாய் காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அதன் காரணத்தினால் அவர்கள் பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர். மேலும், பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும்போது, வீட்டில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காகவும் அவர்கள் பாடசாலை படிப்பை இடையிலேயே கைவிடும் நிலை ஏற்படுகிறது. பொருளாதார சுமைகள் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றனர்

சிம்பாப்வேவில் உள்ள 20 இலட்சம் குழந்தைகளின் கல்வியை அங்கு நிலவும் கடும் வறட்சி கேள்விக்குறியாகவே வைத்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2015-2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்நினோ விளைவினால், 45,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடசாலை படிப்பை கைவிட்டனர். சிம்பாப்வே மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நாடுகளும் இதுபோன்ற வானிலை மற்றும் பருவநிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

குழந்தைகள் பாடசாலைக்கு தொடர்ச்சியாக வருவதை உறுதி செய்ய சிம்பாப்வே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாடசாலைக்கு வரும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஒருவேளை உணவு வழங்குவது, குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி செய்வது போன்ற விடயங்களை அரசு முன்னெடுத்துள்ளது. குழந்தைகளின் கல்வி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!
செய்திகள்

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!

June 15, 2026
மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?
செய்திகள்

மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?

June 15, 2026
புளத்சிங்கள பகுதியில் கணவன்–மனைவி மர்ம மரணம்; இரு சடலங்கள் மீட்பு!
செய்திகள்

புளத்சிங்கள பகுதியில் கணவன்–மனைவி மர்ம மரணம்; இரு சடலங்கள் மீட்பு!

June 15, 2026
யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!
செய்திகள்

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!

June 15, 2026
வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்
செய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

June 15, 2026
டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்
செய்திகள்

டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்

June 15, 2026
Next Post
ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.