களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள பகுதியில் கணவன் மற்றும் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஏகல்ல ஓயா பகுதியில் அமைந்துள்ள இருமாடி வீட்டின் மேல் மாடியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வாடகை அடிப்படையில் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விஜிதசிறி தசநாயக்க (62) மற்றும் அவரது இரண்டாவது மனைவி எனக் கூறப்படும் புஷ்பா ஷிரோமணி (55) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பெண்ணின் சடலத்தில் இரத்தக் கறைகள் காணப்பட்டதுடன், சடலம் துணியால் மூடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வீடு கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்ததால், மரணங்கள் சில நாட்களுக்கு முன்பே நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








