Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?

மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடி வரும் தங்களுக்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1001நாட்களை கடந்த போராட்டம் சித்தாண்டி சந்தியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
தமது கால்நடைப்பண்ணைக்குரிய காணியை தங்களுக்கு வழங்குமாறு கோரி 1001 நாட்களை கடந்தும் போராடிவரும் தம்மை தொடந்து ஏமாற்றிவருவதாக மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை.

கொழும்பில் உள்ள மகாவலி அதிகார சபை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கடந்த 10 ஆம் திகதி தம்முடன் ஒரு முக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் மேய்ச்சல் தரைக்கு எவ்வளவு நிலம் ஒதுக்குவது, எங்கு ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்படவிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி அந்தச் சந்திப்பும் நடைபெறவில்லை.

கால்நடைகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யக் குளங்களை அமைத்துத் தருவதாகவும், பாதைகளைச் சீரமைத்துத் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துச் சென்ற போதிலும், இன்றுவரை எந்தவொரு பணியும் ஆரம்பிக்கப்படவில்லை.

போராட்டப் பகுதியில் தற்காலிகக் கொட்டில்களை அமைத்து, ஜனாதிபதியின் வார்த்தைகளை நம்பி தங்கியிருக்கும் தங்களுக்கு, தொடர்ச்சியாகப் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. அப்பகுதியில் காடுகளை அழித்துச் சட்டவிரோத பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுபவர்கள், பண்ணையாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்துவதுடன், தங்களது வாழ்வாதாரத்திற்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவருகின்றனர்.

1500 ஏக்கர் நிலப்பரப்பு என்பது தங்களது ஒட்டுமொத்த கால்நடைகளுக்கும் போதுமானதாக இருக்காது எனத் தெரிவிக்கும் பண்ணையாளர்கள், தங்களுக்குக் குறைந்தது 3000 ஏக்கர் நிலமாவது ஒதுக்கப்பட்டால் மட்டுமே கால்நடைகளைச் சரியாகப் பராமரிக்க முடியும் என வலியுறுத்துகின்றனர். அத்துடன், மகாவலி அதிகார சபையிடம் தங்களுக்குக் குடியேற்ற நிலங்கள் தேவையில்லை என்றும், கால்நடைகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்களை மட்டுமே ஒதுக்கித் தருமாறும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு