Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா?; தொல்பொருள் திணைக்களப்பணிப்பாளரிடம் ஜனாதிபதி முறுகல்!

நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா?; தொல்பொருள் திணைக்களப்பணிப்பாளரிடம் ஜனாதிபதி முறுகல்!

2 years ago
in முக்கிய செய்திகள்

வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகாரைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பொது மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் தேசிய கொள்கைகளை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.’

அத்தோடு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுவதாகக் குறிப்பிட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க , ‘நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? ‘ என்று அதிகாரிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை மே 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை என வடக்கு பிரதிநிதிகளால் அதிபரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் , ‘எனக்கு அதனை விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.’ எனக் குறிப்பிட்டார்.

எனினும் அது அமைச்சரவையின் கொள்கை என்றும், அதனை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிபர் ரணில் கடுந்தொனியில் தெரிவித்ததோடு, அடுத்த முறை இவ்வாறு தேசிய கொள்கையை பின்பற்றாமைக்கு காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.

மேலும், விகாரையொன்றை அமைப்பதற்கு 275 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்தால் அது மகா விகாரையை விடவும் பெரியதாகிவிடும். மகா விகாரை, தியதவனாராமய மற்றும் அபய கிரி உள்ளிட்ட அனைத்து விகாரைகளை இணைத்தால் 100 ஏக்கர் காணப்படும். அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று அதிபர் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.

பொது மக்களின் 3000 ஏக்கர் காணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. பனாமுரே திலகவன்ச என்ற தேரரே தற்போது அந்த காணியை ஆக்கிரமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன் போது சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியின் உறுப்பினராக அந்த தேரர் செயற்பட்டதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அதிபர், ‘அந்த செயலணி தற்போது செயற்பாட்டில் இல்லையல்லவா? அத்தோடு அந்த செயலணிக்கு அரசாங்கத்தின் காணியையோ அல்லது தனியாரின் காணியையோ ஆக்கிரமிக்க முடியாது. இதில் என்ன சட்ட முறைமை காணப்படுகிறது? வனப்பகுதிகள் உங்களுக்கு உரித்தானதில்லையல்லவா? திரியாயவுக்கு எதற்காக 3000 ஏக்கர் காணி தேவைப்படுகிறது?

திரியாய என்பது விகாரையல்ல. முன்னயை காலங்களில் அது துறைமுக மையமாகும். படகின் மூலம் திரியாயவிலிருந்து ஹொரவபொத்தான வரை செல்ல முடியும்.

பின் ஹொரவபொத்தானையிலிருந்து அநுராதபுரத்துக்கும், அங்கிருந்து மல்வத்து ஓயாவுக்கும் , அங்கிருந்து மன்னாருக்கும் செல்ல முடியும். அந்தப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலொன்றும் காணப்பட்டது.

எனவே அங்கு தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அதிபர் இதன் போது பணிப்புரை விடுத்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

May 12, 2025
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்
காணொளிகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

May 12, 2025
மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
காணொளிகள்

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

May 12, 2025
Next Post
உணவு நஞ்சாகியதில் இளம் தாய் பலி; மட்டு மாங்காடு பிரதேசத்தில் சம்பவம்!

பேத்தை மீனை உட்கொண்ட மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.