Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா நேரடி விஜயம்!

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா நேரடி விஜயம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் – காத்தான்குடி கோட்டத்தின் கீழ் உள்ள காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா நேற்று முந்தினம் (22) திங்கட்கிழமை நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

பாடசாலையின் அதிபர் எம்.பி.எம். றபீக் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் விடுத்த அழைப்பின் பேரிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா இவ் விஜயத்தினை மேற்கொண்டார்.

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயம் காத்தான்குடி பிரதேசத்தில் முதலாவது மூத்த பாடசாலையாகவும் காணப்படுவதுடன் இப் பாடசாலையின் கல்வி மட்டமும் தற்போது மிக சிறப்பாக வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றன.

இருப்பினும் பாடசாலையின் வகுப்பறை கட்டடப் பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலையின் வளப்பற்றாக்குறை என்பன நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில் அதனை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிசாஹிர் மௌலானவின் ஊடாக முடிந்தளவு தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் முகமாகவே குறித்த அழைப்பு விடக்கப்பட்டிருந்து.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிசாஹிர் மெளலானா பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் உதவியுடன் பாடசாலையினை பார்வையிட்டதுடன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

அழைப்பு விடுத்தவுடன் எவ்வித மறுப்பும் இன்றி மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் கரிசனை கொண்டு விரைவாக விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிசாஹிர் மௌலானவுக்கு இதன்போது பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை பொற்றி கௌரவித்தனர்.

மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் விஜயத்தின்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளர் பெரோஸ் முஹம்மட், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்
செய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்

November 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்

November 20, 2026
மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

November 20, 2026
இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

November 20, 2026
வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
செய்திகள்

வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

November 20, 2026
ஹட்டன் பொதுச் சந்தை அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றியது சட்டபூர்வமானது; நகரசபைத் தலைவர்!
செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தை அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றியது சட்டபூர்வமானது; நகரசபைத் தலைவர்!

November 20, 2026
Next Post
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேஷபந்து தென்னகோனுக்கு இடைக்கால தடை உத்தரவு!

பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேஷபந்து தென்னகோனுக்கு இடைக்கால தடை உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு