வவுனியா – ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
து. நாகராசா எனும் நபர் கடந்த 18ஆம் திகதி காலை காட்டுக்குச் சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததைத் தொடர்ந்து, உறவினர்கள் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் போன நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது ஓமந்தை பொலிஸாருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







